பக்காத்தான் -பிஎஸ்எம் சந்திப்புக்கு பாஸ் ஏற்பாடு செய்யும்

PSMபக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுக்கும் பிஎஸ்எம் என்ற மலேசிய  சோஷலிசக் கட்சிக்கும் இடையில் உயர் நிலத் தலைவர்கள் சந்திப்புக்கு பாஸ்  ஏற்பாடு செய்யும்.

பிஎஸ்எம் கொள்கைகள் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளுக்கு ஏற்புடையதா  இல்லையா என்பது அந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும்.

அந்த விவரங்களை பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன்  வெளியிட்டார்.

நேற்று பிஎஸ்எம், பாஸ் தலைவர்களுடன் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசிய  போது ஏற்பட்ட முக்கியமான விளைவு அது தான் என அவர் சொன்னார்.PSM1

“பக்காத்தானுடன் சித்தாந்தம் பற்றியும் விஷயங்களும் பிஎஸ்எம் சேர்த்துக்  கொள்ளப்பட வேண்டுமா இல்லையா என்பதும் மேலும் வெளிப்படையாக  விவாதிக்கப்பட வேண்டும் என பாஸ் கருதுகிறது,” என்றார் அவர்.

“அந்தச் சந்திப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும் பாஸ்  கட்சியுடன் எங்களுக்கு நல்ல உறவுகள் உள்ளன. நாங்கள் அதனைச்  சந்தேகிக்கவில்லை. பக்காத்தானைச் சந்திக்க ஆர்வமாக உள்ளோம்.”