அஸ்திரேலியாவுக்கான படகுப் பயணமும் அவல நிலையும்

svREFUGEEBOAT-420x0இலங்கையில் இடம்பெறும் இன அழிப்பு காரணமாக தமிழ் மக்கள் செந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்வதற்க்கான உரிமை மறுக்கப்பட்டு தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அஸ்திரேலியா பயணம்.

கடல் மார்க்கமாக பயணிப்பது என்பது ஒரு மனிதனின் மரணப் பயணமாகவே இது அமைகின்றது. தமிழ் அகதிகள் தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான பாதுகாப்பற்ற இந்த கடல் பயணத்தை தொடர்கின்றனர்.

ஆனால் தற்போது அஸ்திரேலியா குடிவரவுத் திணைக்கலமானது தனது சட்டத்தில் பாரிய திருத்தங்களை எற்படுத்தி உள்ளது.

2012.08.13ம் திகதிக்கு பின் அஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கான இந்த விசாவானது சமூகத்தில் மக்களுடன் வாழ்வதான ஒரு தற்காலிக விசாவாகும.

இதன் அடிப்படையில் 3 நிபந்தனைகள் இதனுல் அடங்கும். அவை

1. தொழில் செய்ய முடியாது.
2. குடும்பத்தை எடுக்க முடியாது
3. பணம் அனுப்பமுடியாது

என்ற நிபந்தனையடிப்படையில் சமூகத்தில் இணைந்து வாழும் தற்காலிக விசாவே வழங்கப்பட்டள்ளது. இது உண்மையில் உயிரிருந்தும் நடமாட முடியாத நிலைதான் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டங்கள் தெரிந்தும் ஆட்கடத்தல் தரகர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து பாதுகாப்பற்ற கடல் பயனத்தை ஏற்பாடு செய்கின்றனர் இவற்றில் பல படகுகள் நடு சமுத்திரத்தில் சங்கமம் அகிய சந்தர்ப்பங்களும் உண்டு.

தமிழர்கள்தான் சிந்தித்து செயற்படவேணடும் எமது இனம் மிகவும் மோசமான முறையில் புறக்கணிக்கப்படுகிறது. இனிமேலாவது தரகர்களின் மோசமான கதைகளைக் கேட்டு ஏமாராமல் உண்மையாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உண்மை நிலை இதுதான் என்பதை உணர வேண்டும்.

எவ்வளவோ பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பல லட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலை. எதிர் காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாவதுடன், அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையுமாகும்.

TAGS: