கருமித்தனம் மிக்கவர், எளிதில் செலவு செய்யமாட்டார் என்ற பெயர் உண்டு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு. அதை மறுக்கிறார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில சட்டமன்றத் தலைவருமான தெங் சாங் கிம்.
“2012 -இல் ரிம 1.7பில்லியன் செலவிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், இறுதியில் செலவிடப்பட்டது சுமார் ரிம2 பில்லியன்” ,என தெங் மலேசியாகினியின் நேர்காணலில் கூறினார்.
அப்படிக் கூடுதலாக செலவிட்ட போதிலும் கடந்த ஆண்டு சுமார் ரிம2.5 பில்லியனை உபரி வருமானமாக சிலாங்கூர் பதிவு செய்திருந்தது.
காலிட்டுக்கு சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளத் தெரியவில்லை என்றாரவர்.