லண்டனில் தமிழ் பெண்ணை உதைத்த சிங்கள காடையர்கள் !

london-abuseஈழத் தமிழர்களுக்கு வெட்கம் மானம் இல்லையா என்று கேட்கும் அளவுக்கு லண்டனில் சம்பவங்கள் நடந்துள்ளது. நேற்றைய தினம் அமைதியாக தமிழர்கள் தமது போராட்டங்களை நடத்திவந்தனர்.

லண்டன் ஓவல் மைதானத்துக்கு வெளியே நின்ற தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கக் கூடாது என்று கோஷமிட்டார்கள்.

இலங்கையில் நடைபெற்ற கொலைகளுக்கு விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அங்கே வந்த சிங்கள இளைஞர்கள், பெண்கள் என்று கூடப் பாரமல் அவர்களை அடித்து உதைத்துள்ளார்கள்.

ஈழத் தமிழ்ப் பெண்களின் முதுகில் சூ காலால் உதைத்துள்ளார்கள். சுமார் 4 லட்சம் தமிழர் வாழும் லண்டனில் வெறும் ஆயிரக்கணக்கில் வாழும் சிங்களவர்கள் இவ்வாறு செய்தது பொறுக்கமுடியாத செயலாகும். தமிழர்களின் பொறுமையைச் சோதிக்கும் செயலாக இது அமைந்துள்ளது.

இச் செய்தி வெளியாகி சில மணி நேரங்களில் எல்லாம், லண்டனில் உள்ள பல தமிழ் இளைஞர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். 20ம் திகதி காடிஃப் நகரில் மீண்டும் ஒரு கிரிகெட் போட்டி நடைபெறவிருக்கிறது. அதில் இலங்கை அணி விளைடாடவும் உள்ளது. எனவே அதன் முன்னால் மற்றுமொரு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்த இளைஞர்கள் முடிவுசெய்துள்ளார்கள்.

இதில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இணைந்து பாரிய எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள். பல பேரூந்துகள் (பஸ்) மூலமாக காடிஃவ் நகரம் நோக்கி வரும் 20ம் தேதி தமிழர்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் முதலில் தமக்குள் இருக்கும் பிணக்குகளைக் களைந்து , இந்த விடையத்திலாவது ஒன்றுபட்டு செயல்படவேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒன்றாக மக்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும். பெரும் அளவில் மக்கள் சென்று, சிங்களவர்களுக்கு நாம் யார் என்று காட்டவேண்டும், இதுவே எனது ஆசை என்று தெரிவித்தார் பாதிக்கப்பட்ட அந்த ஈழத் தமிழ் பெண்.

TAGS: