மேயர்: மெர்டேகா அரங்கமே பேரணிக்குப் பொருத்தமான இடம்

1 dbklபக்காத்தான் ரக்யாட்டும் பல என்ஜிஓ-களும், சனிக்கிழமை ‘505 கறுப்புப் பேரணி’யை கோலாலும்பூர், பாடாங் மெர்போக்கில்தான் நடத்துவோம் எனப்  பிடிவாதமாகக் கூறிவரும் வேளையில் மெர்டேகா அரங்கமே அதற்குப் பொருத்தமான இடம் என்கிறார் கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல்.

“மூன்று மாற்று இடங்களை ஏற்பாட்டாளர்களிடம் பரிந்துரைத்திருந்தாலும் மெர்டேகா அரங்கமே மிகப் பொருத்தமான இடமாகும்”, என்று சினார் ஹரியானிடம் அவர் தெரிவித்தார். அங்கு கூட்டத்தைக் கட்டுப்பாட்டுடன் நடத்தலாம். பொதுச் சொத்துகளுக்குச் சேதமும் ஏற்படாது.

பேரணி ஏற்பாட்டாளர்களின் மறுமொழிக்கு டிபிகேஎல் காத்திருக்கிறது என்றாரவர்.