கடந்த வாரம் பினாங்கு அம்னோ கட்டிடத்தில் நிகழ்ந்த விபத்துக்கு தாம் பொறுப்பு என அந்த மாநில அம்னோ தலைவர் கூறியுள்ளதை முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் புன்னகையுடன் புறந்தள்ளியுள்ளார்.
ஜைனல் அபிடின் ஒஸ்மான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பற்றி வினவப்பட்ட போது அவர்,” வழக்கம் போல அவர்கள் என் மீது பழி போடுகின்றனர்,” என்றார்.
“அந்தக் கட்டிடம் இடிந்தாலும் என் மீது பழி போடுங்கள். அம்னோவில் தேர்தல் நிகழ்ந்தாலும் அதற்கும் அன்வாரே காரணம்.”
அந்தக் கட்டிடத்துக்கான வரைபடங்கள் சமர்பிக்கப்படுவதற்கு முன்னரே கட்டுமான வேலைகளைத் தொடங்குவதற்கான சிறப்பு ஆணை பிறப்பிக்கப்பட்ட போது அன்வார் பினாங்கு அம்னோ தலைவராக இருந்ததால் மெனாரா அம்னோ பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க ‘மிகவும் தகுதி வாய்ந்த’ நபர் அவரே என ஜைனல் வலியுறுத்தியிருந்தார்.
“அன்வாருக்கு எல்லாம் தெரியும். நாங்கள் அந்தக் கட்டிடத்தை பெற்றுக்
கொண்டோம். அப்போது நாங்கள் எந்தப் பதவியிலும் இல்லை,” என்றும் அவர் சொன்னார்.