தமிழர் உரிமைகளை அழிக்க சிங்களர் 10 லட்சம் கையெழுத்து!

eelam20613cவட கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. கடந்த 33 வருடங்களாக நடக்காமல் இருந்த 2 மாகாணசபைகளும் இவையே. இதுவரை காலமும் எதுவும் பேசாது இருந்த சிங்கள கடும்போக்காளர்கள், தற்போது இதுகுறித்து பல செயல்பாடுகளில் இறங்கியுள்ளார்கள்.

அதாவது வட கிழக்கு தேர்த்தல் நடைபெற்று மாகாணசபை அமைக்கப்பட்டால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அவர்களுக்கு கொடுக்க கூடாது என்பது தான் சிங்களவர்களின் நோக்கமாக உள்ளது. அதாவது எவ்வகையிலாவது, இலங்கையில் உள்ள தமிழர்களை தமது அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.

அப்படி என்றால் தான் வேண்டிய வகையில் அவர்களை அழிக்க முடியும். இதே நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் இலங்கையில் தமிழர்கள் இருக்கவே மாட்டார்கள்.

ஈழத் தமிழர்கள் என்ற இனம் அழிந்து, சிங்கள -தமிழ் கலப்பினம் தான் மிஞ்சும். இதனை நடத்தவே சிங்கள கடும்போக்காளர்கள் முயல்கிறார்கள். தற்போது இவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் சென்று பாரிய பிரச்சாரங்களை மேற்கொண்டு, அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளார்கள்.

அதாவது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வேண்டாம் என்று. இதில் ஒரு விடையமும் அடங்கியுள்ளது. இவர்கள் சொல்வதுபோல, மாகாணசபையிடம் இருந்து இந்த அதிகாரங்களைப் பறித்தால், சிங்களப் பகுதிகளில் உள்ள மாகாணசபைகளில் அதிகாரங்களும் பறிக்கப்படும்.

ஆனால் அப்படி போனாலும் பரவாயில்லை, ஆனால் வட கிழக்கு மாகாணசபைக்கு இந்த அதிகாரம் செல்லக்கூடாது என்பது தான் இச் சிங்களவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

தமிழர்களுக்கு எந்த உரிமையையும் கொடுக்க கூடாது என்பதில், இலங்கையில் உள்ளை அனைத்து சிங்கள மக்களும் மிகவும் தீர்க்கமான முடிவில் உள்ளார்கள். இதில் ஆழும் கட்சி, எதிர் கட்சி, மற்றும் கொசுறுக் கட்சிகள் எல்லாமே ஒன்றாகத் தான் இணைந்து செயல்படுகிறார்கள்.

ஆனால் தமிழர் தரப்பை எடுத்துக்கொண்டால் தான் மிகவும் கவலையான நிலையில் உள்ளது. காரணம் 108 பிரிவுகள் உள்ளது. இவை அனைத்தும் எப்போது ஒன்றுசேரும் ?

TAGS: