முன்னாள் செபாங்கார் எம்பி எரிக் என்சின் மஜிம்புன், பிலிப்பினோ குடியேறி ஒருவர் தம் தந்தையின் பெயரைத் திருடி வைத்துக்கொண்டார் என சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று சாட்சியமளித்தார்.
“அது பற்றி அதிகாரிகளுக்கு எழுதினேன்.அவரது அடையாள அட்டையின் பிரதியை அனுப்பினார்கள்”.
அதில் அவரது பெயர் ‘ஜெரோமி மஜிம்புன்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.
ஆணையம் விசாரித்ததில் அந்த அடையாள அட்டை போலியானது என்று தெரிய வந்ததாக எரிக்கிடம் தெரிவிக்கப்பட்டது.
“போலி என்றால் ஏன் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படித்தான் சாபா மக்களிடம் நடந்துகொள்வதா?”, என்றவர் ஆத்திரப்பட்டார்.