பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை சேர்ந்தவர் ரவுக் அல்ப்பதாஸ் (வயது 25). இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவிக்கு தற்போது 21 வயது ஆகிறது. இந்த 7 ஆண்டில் அவரது மனைவி 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அவருக்கு 1 தடவை 4 குழந்தைகள் பிறந்தன. இன்னொரு தடவை 3 குழந்தைகள் பிறந்தன. அடுத்து இரட்டை குழந்தைகள் பிறந்தன. அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து வந்ததால் 21 வயதிலேயே அவருக்கு 11 குழந்தைகள் உள்ளன.
ரவுக் அல்ப்பதாஸ் அரசு ஊழியராக உள்ளார். 11 குழந்தைகளை வளர்ப்பதற்கு போதிய பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். 11 குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. ஆனாலும் உணவுக்கும், மற்ற தேவைகளுக்கும் இது போதவில்லை என்று ரவுக் அல்ப்பதாஸ் கூறினார்.
எனக்கு விபரம் தெரிஞ்சி ஈரான் -ஈராக் பிரச்சனை அதுக்கு பிறகு இஸ்ரேல் – பலஸ்தீனம் பிரச்சனைதான் ஆனா அதைவிட நாம அல்ப்பதாஸ் குதான் பெரியபிரச்சனைதான்