மசீச மூன்று ஆண்டுகளுக்கு ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினரை இடைநீக்கம் செய்தது

teeஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டதின் மூலம் கட்சி  நிலையை மீறியதற்காக தனது முன்னாள் தேசிய அமைப்புச் செயலாளர் தீ சியூ  கியோங்-கை மசீச மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

அந்த மூன்று ஆண்டு கால இடைநீக்கத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு  பரிந்துரை செய்ததாகவும் அதனை தலைவர் மன்ற உறுப்பினர்களில்  பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டதாகவும் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய்  லெக் கூறினார்.

இடைநீக்கத்தை எதிர்த்து தீ மத்தியக் குழுவுக்கு 14 நாட்களுக்குள் முறையீடு  செய்து கொள்ளலாம் என சுவா இன்று தலைவர் மன்றக் கூட்டத்துக்குப் பின்னர்  நிருபர்களிடம் தெரிவித்தார்.