தீ கியாட்: யென் யென்-னுக்காக சுவா கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளார்

chuaபொதுத் தேர்தலுக்குப் பின்னர அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற மசீச  முடிவை மீறி கட்சியின் உதவித் தலைவர் இங் யென் யென் மலேசிய சுற்றுலா  மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை தொடருவதற்கு அனுமதித்துள்ள கட்சித்  தலைவர் சுவா சொய் லெக்-கை முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட்  சாடியுள்ளார்.

சுற்றுலா அமைச்சர் அந்தப் பொறுப்புக்கு இங்-கை நியமித்துள்ளதால் அதனை  அவர் தொடரலாம் எனச் சுவா சொல்லும் வாதம் பலவீனமானது என்றார் அவர்.

அதே வேளையில் அரசாங்கப் பதவிகளை ஏற்றுக் கொண்ட மற்றவர்கள்
தண்டிக்கப்பட்டுள்ளனர் என ஒங் சொன்னார்.

ஜோகூர் ஆட்சிமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டதற்காக கட்சியின்  ஒழுங்கு நடவடிக்கை வாரியம் ஏன் தீ சியூ கியோங்கை மூன்று ஆண்டுகளுக்கு  இடைநீக்கம் செய்ய வேண்டும் என அவர் வினவினார்.

 

TAGS: