13வது அரசியல் சட்டத்தில் திருத்தம்: இந்திய அரசு ஆட்சேபிக்கவில்லை: ராஜபக்ஷே

eelam22613aஇலங்கையில், தமிழர் பகுதிக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய, இந்திய அரசு ஆட்சேபிக்கவில்லை,” என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கையில், வடகிழக்கு மாகாணங்களுக்கு, சுயாட்சி அளிக்க வழி செய்யும் ஒப்பந்தம், 1987ல், இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் மற்றும் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனேவால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான சண்டை, 2009ல் முடிந்தது. இதையடுத்து, வடக்கு மாகாணத்தில், வரும் செப்டம்பரில், தேர்தலை நடத்த, இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாகாணத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன், 13வது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் படி, ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வற்புறுத்துகின்றன. இதன் காரணமாக, அவசர சட்டத்தின் மூலம், 13ஏ சட்டத்தில் திருத்தம் செய்ய, ராஜபக்ஷே முடிவு செய்துள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன், டில்லிக்கு வந்து, பிரதமர் மன்மோகனை சந்தித்தனர். இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அடுத்த மாதம், இலங்கை செல்கிறார்.

இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ஷே குறிப்பிடுகையில், “”கடந்த, 87ம்ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட, 13வது அரசியல் சட்டத்தில் எந்த விதிமுறை மீறலும் நடக்கவில்லை. இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, இந்திய அரசு ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை,” என்றார்.

TAGS: