பெண்களுக்கு கவர்ச்சி தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்றே போதும்: ஆய்வில் தகவல்

worldnews22613aலண்டன்: “பெண்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தவே விரும்புகின்றனர்’ என, பிரிட்டன் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள வர்த்தக சேனல் ஒன்று, சமீபத்தில், பெண்களின் விருப்பம் தொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில், அழகு, கவர்ச்சி போன்றவற்றை விட, தாங்கள் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள் என்பதையே பெண்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் பெண்கள் என்ற பெருமை, 52 சதவீத பெண்களிடம் உள்ளது. அதுபோல், கவர்ச்சிக்கு, 22 சதவீத பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். புத்திக்கூர்மையுடன் திகழ வேண்டும் என, 12 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். சிவப்பு தோலுடன் திகழ வேண்டும் என, 36 சதவீதம் பேரும், அழகான புருவங்கள் இருக்க வேண்டும் என, 26 சதவீதம் பேரும், இளம் சிவப்பான கன்னங்கள் இருக்க வேண்டும் என, 17 சதவீதம் பேரும், உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என, 14 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பிரிட்டனின் பாடகரும், பாடல் ஆசிரியருமான, ஜெஸ்சி கூறுகையில், “”இந்த கருத்துக் கணிப்பு, மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், தாங்கள் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர் என்பதற்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது தெரிகிறது,” என, தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தன்னம்பிக்கை மிகுந்தவராக தங்களை காட்டிக்கொள்ள, அதிக ஒப்பனை தேவையில்லை; இயற்கையாக நம் சுபாவப்படி நாம் நடந்து கொள்ளலாம். இதில், தவறு எதுவும் இல்லை என, 77 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.