இரண்டுநாள் தடுப்புக் காவலில் ஹுசாம்

1 husamவிசாரணைக்காக பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசாவை இரண்டு நாள் தடுத்துவைக்க போலீசார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

திங்கள்கிழமை, கட்சி செய்தித்தாளான ஹராகாவில் வெளிவந்திருந்த கட்டுரையில் ஹுசாம் தேச நிந்தனைக் கருத்துகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்,  நேற்று பிற்பகல் கோலாலும்பூரில்  கைது செய்யப்பட்டு கிளந்தான் கொண்டு செல்லப்பட்டார்.