புகைமூட்டத்தைச் சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளையும் வழிகாட்டிமுறைகளையும் பின்பற்றுமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மாநிலச் செயலாளருக்கும் ஆட்சிக்குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
போதுமான முகமூடிகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள் வேண்டும் என்றாராவர்.
ஆனால், சிங்கப்பூர் ஒரு மில்லியன் N95வகை முகமூடிகளை முன்கூட்டியே வாங்கிவிட்டதால் அந்த வகை முகமூடிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
“பொறுப்பின்மையாலும் மெத்தனத்தினாலும் (மலேசிய) அரசாங்கம் சிங்கப்பூரிடம் மீண்டும் தோற்றுப்போனது……எனவே, புகைமூட்டம் மேலும் மோசமடையக் கூடாது என பிரார்த்தனை செய்வதைவிட வேறு வழியில்லை”, என்று ஓர் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.