காற்றுத்தூய்மைக்கேடு குறியீடு (ஏபிஐ) ஜோகூரின் மூவாரில் ‘அபாய எல்லை’யான 746-இலிருந்து இன்று காலை 7மணிக்கு 148ஆகக் குறைந்தது.
ஆனால், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், திரெங்கானு ஆகியவற்றில் நிலமை மோசமடைந்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.
சிலாங்கூரில் கிள்ளானிலும் திரெங்கானுவில் கெமாமானிலும் காற்றின் தரம் முறையே 296 ஆகவும் 249 ஆகவும் பதிவாகியுள்ளது. இது ‘மிக ஆரோக்கியமற்ற’ ஒரு நிலை.
மொத்தம் 19 இடங்களில் ‘ஆரோக்கிமற்ற’ நிலை பதிவாகியுள்ளது.