பண்டிக்கார் அமீன் முலியா மக்களவை சபாநாயகராக இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தின் முதல் நாளான இன்று காலையில் ‘வாக்கெடுப்பு’ நடந்த பின்னர் அவர் சபாநாயகராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
வாக்கெடுப்பில் பண்டிக்காருக்கு 133 வாக்குகள் கிடைத்தன. அவர் பக்காத்தான் ராக்யாட் முன்மொழிந்த முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமானை தோற்கடித்தார். அப்துல் காதிருக்கு 89 வாக்குகள் கிடைத்தன.