ஹிரோஷிமா அணுகுண்டை போல் நான்கு மடங்கு பூமியின் வெப்பம் அதிகரிப்பு!

worldnews24613bஒவ்வொரு வினாடியும், பூமி மீது, அதிகப்படியான வெப்பம் திணிக்கப்படுகிறது. இது ஜப்பானின், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போல, நான்கு மடங்கு அதிகம்’ என, ஆஸ்திரேலிய விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த ஜான் குக், மேலும் கூறியதாவது:பூமி மீது, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிகப்படியான கரியமில (கார்பன்-டை-ஆக்சைடு) வாயுவின் அடர்த்தி அதிகரித்து உள்ளது.

இதனால் பூமியில், அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது.இது, ஜப்பானின், ஷிரோஷிமாவில், அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய அணுகுண்டு தாக்குதலை விட, நான்கு மடங்கு அதிகம். அதுவும் ஒவ்வொரு வினாடியும், புவி இவ்வாறு கடுமையான வெப்பத்திற்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்த நிலை, இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் என்ன ஆகும் என, நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

இந்த அதிகப்படியான வெப்பம், 90 சதவீதம் கடலுக்குத்தான் செல்கிறது. இதுதான், நிலப்பகுதியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளை காட்டும் அளவைக் கருவியைப்போல் செயல்படுகிறது.இதனால், நிலங்கள், பனி மலைகள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் மீது, இவை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

இதன் காரணமாக, விலங்குகள் முன்னதாகவே, பாலுறவில் ஈடுபடுகின்றன. இதனால், பல விரும்பத்தகாத அம்சங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இதற்கு விலங்குகள் காரணமல்ல, பருவநிலை மாறுபாடுகளில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம். இதற்கு ஏற்றாற்போல் விலங்குகள் தங்களை மாற்றிக் கொள்கின்றன.

இந்த புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்களே முக்கிய காரணம். கடந்த, 20 ஆண்டுகளாக, இதுகுறித்து நடைபெற்று வரும் ஆய்வுகளில், மனிதர்களின் தவறுகளால், புவி வெப்பமடைதல் வேகமாக நடைபெறுவதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.