லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள் !

eelam25613dபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு, ஒருங்கிணைப்பில் ஞாயிறு 23 அம் திகதி அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி  இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர். ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சுயாதீன சர்வதேச விசாரணை பற்றிய பதாதைகளும் மற்றும் தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் மாணவர்கள் கோசம் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரித்தானிய இளவரசர் அவர்களும் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார் . பிரித்தானியாவிலுள்ள 10 க்கும் மேற்ப்பட்ட பல்கலைக் கழகங்களிலும் இருந்து மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

eelam25613cஇவ் ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னதாக பிரசித்தி பெற்ற சுற்றுலா பயணிகள் கூடுதலாக காணப்படும் இடமான Piccadly Circus இல் மாணவர்கள் பலர் சேர்ந்து மேற்கத்தைய நடனத்துடன் சார்ந்த பாணியில் திடிரென்று வேற்றின மக்கள் முன்னால் தோன்றி நடனமொன்றை இடம்பெற செய்து அதன் மூலமாக ஈழப்பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வை பரப்பினர். அவர்களின் நடன நிகழ்வை ஒட்டி மற்றும் சில மாணவர்கள் சுற்றியுள்ள சுற்றுலா பயணிகளிற்கும் மற்றும் வேற்று இன மக்களிற்க்கும் ஈழப் பிரச்சனையைப் பற்றிய துண்டு பிரசுரங்களை அளித்தனர்.

ஆர்பாட்டத்தின் போது தமிழ் இளையோர் அமைப்பால் முன்வைக்கப்பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் மற்றும் சிறுவர்களின் கைப்பட உருவாகிய மனுக்களும் பிரதமர் மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நன்றியுரையுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வசனத்துடன் நிறைவேறியது.

TAGS: