அன்வார் மீண்டும் எதிர்த்தரப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்

anwar13வது நாடாளுமன்ற மக்களவையில் எதிர்த்தரப்புத் தலைவராக அன்வார்  இப்ராஹிம் இன்று மீண்டும் நியமிக்கப்பட்டார்.

பெர்மாத்தாங் பாவ் எம்பி-யுமான அன்வார் எதிர்த்தரப்புத் தலைவராக
நியமிக்கப்படுவதை மக்களவை சபாநாயகர் பண்டிக்கார் அமீன் முலியா
அறிவித்தார்.

“அவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய ஏகமனதான ஆதரவை  அன்வார் பெற்றுள்ளார் என்பதில் நான் மனநிறைவு கொள்கிறேன்,” என அவர்  சொன்னார்.

2008ம் ஆண்டு பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற  இடைத் தேர்தலுக்குப் பின்னர் 12வது நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்புத்  தலைவராக அன்வார் முதன் முறையாக நியமிக்கப்பட்டார்.

பெர்னாமா