சரத் பொன்சேகாவின் உரிமைகளை மீண்டும் வழங்க ராஜபக்ச ஆலோசனை

eelam27613bஜனநாயக கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் உரிமைகளை மீண்டும் வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அதிக கவனம் செலுத்தி வருகிறார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த வருடம் மே மாதம் 21ம் திகதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது, அவரது வாக்குரிமை மற்றும் அரசியல் ஈடுபாடு போன்றனவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவற்றினையே தற்போது ஜனாதிபதி மீண்டும் வழங்கவுள்ளார் என அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சரத் பொன்சேகாவுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் மீண்டும் ஈடுபடவுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இருப்பினும் இந்தத் தகவலை உறுதி செய்ய சரத் பொன்சேகா மறுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

TAGS: