ஒரு வணிகர் தம்மீது தொடுத்துள்ள தாக்குதல் வழக்கைத் தள்ளுபடி செய்ய அம்னோ உதவித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அஹ்மட் ஜஹிட் ஹமிடி செய்துகொண்ட மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப் தலைமையில் அதை ஆராய்ந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு, “அந்த வழக்குமீதான விசாரணை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தொடரட்டும்”, என உத்தரவிட்டது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சருக்கு எதிரான வணிகர் அமீர் பஜ்லி அப்துல்லாவின் வழக்கு ஆகஸ்ட் 26-இல் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.