மருந்து விலை அதிகரிக்கும் என்றால் டிபிபிஏ-இல் கையெழுத்திட மாட்டோம்

1 mustapaமருந்துகளின் விலையேற்றத்துக்கு வழிகோலும் எனத் தெரிந்தால் ட்ரேன்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தை (டிபிபிஏ) மலேசிய அரசாங்கம் எதிர்க்கும்.

“மருந்துவிலை காப்புரிமையில் இப்போதுள்ள நிலை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்”, என அனைத்துல வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

“நமது தேசிய நலனைப் பாதுகாப்போம். ஒப்பந்தத்தில் சில நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல என்றால் அதை ஏற்க மாட்டோம்”, என்றாரவர்.

டிபிபிஏ தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

TAGS: