சீனாவில் தொழிலாளர்களால் பணயம் வைக்கப்பட்ட வணிகர் விடுதலை

worldnews28613aசீனாவில் தனது சொந்த தொழிற்சாலையின் பணியாளர்களால் கடந்த 7 நாட்களாகப் பிடித்துப் பணயம் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க வணிகர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தனது பணியாளர்களுடன் ஒரு உடன்பாடு ஏற்பட்ட பின்னரே சிப் ஸ்டேர்ன்ஸ் என்ற அந்த வணிகர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலுவையில் இருக்கும் தமது இரு மாதச் சம்பளத்தை கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட பின்னரே அவரை தாம் விடுதலை செய்ததாக அந்த பணியாளர்களில் சிலர்  கூறினார்கள்.

அவர்கள் அனைவருக்கும் வேலையும் பறிபோகாது என்றும் அவர் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ விநியோக நிறுவனம் ஒன்றின் பணியாளர்களான அவர்கள், கடந்த வாரம் தமது முதலாளியை அவரது அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டார்கள். அவரது இண்டர்நெட் தொடர்பையும் துண்டித்த அவர்கள், அவர் தூங்காமலும் இடையூறு செய்து வந்தார்கள்.

இந்த விடயத்தில் தலையிட உள்ளூர் பொலிஸ் மறுத்துவிட்டது. அது ஒரு சிவில் விவகாரம் என்று அவர்கள் கூறிவிட்டனர். -BBC