டாக்டர் இங் யென் யென்னை மலேசிய சுற்றுலா வளர்ச்சி வாரியத்துக்கு நியமனம் செய்தவர் சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ். இதை அமைச்சரே உறுதிப்படுத்தினார்.
சுற்றுலா துணை அமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளதால் யென் யென்னின் (இடம்) அனுபவம் சீனச் சுற்றுலா பயணிகளைக் கவர உதவும் என்ற நம்பிக்கையில் அவரை அவ்வாரியத்தின் தலைவராக நியமனம் செய்ததாக நஸ்ரி கூறினார்.
“பிரதமரின் ஒப்புதலுடன் அவரை நியமித்தேன். இங் அப்பதவிக்குத் தம்மைத் தாமே நியமித்துக்கொள்ளவில்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இங், தம்மைத் தாமே அப்பதவிக்கு நியமனம் செய்துகொண்டார் என்று ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
செம்பருத்தி எம்பெருமான் கருத்தை வெளியிடுவார்களா??? உமக்கு தைரியம் இல்லை… ஆனால் நான் உணமையான மரத் தமிழன் எனக்கு தைரியம் இருக்கு!