நவநீதம் பிள்ளை BBC நிகழ்சியில் இலங்கைக்கு மீண்டும் அடி!

eelam01713cஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை மேல் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நேற்று  முந்தினம்(28) BBC நிகழ்ச்சி ஒன்றில் அவர் மக்களுடைய கேள்விக்கு பதிலளித்தார்.

பல உலக நாட்டு விடையங்கள் இங்கே பேசப்பட்டது. இருப்பினும் முக்கியமான இடத்தைப் பிடித்த விடையம் இலங்கையாகவே இருந்தது. இலங்கையின் நிலை குறித்து பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நவிப்பிள்ளை, இலங்கையில் இறுதிப்போரில் நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது நான் இலங்கை செல்லவிருக்கிறேன், அங்கே சென்று நானே மக்களோடு பேசவிருக்கிறேன் என்று அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளது, இலங்கை அரசை மேலும் எரிச்சலூட்டியுள்ளது.

நவிப்பிள்ளை அவர்கள் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி இலங்கை சென்று 31ம் திகதிவரை அங்கே தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். இன் நிலையில் அவர் நேற்று முந்தினம் தெரிவித்த கருத்துக்கள், சிங்கள மக்களையும் அரசையும் எரிச்சலூட்டியுள்ளது.

இலங்கைக்கு நவிப்பிள்ளை அவர்கள் வருவதை மகிந்தர் விரும்பவில்லை. இதனால் அவர் பயணம் தள்ளிப்போனது. இருப்பினும் அமெரிக்கா ஐ.நாவில் கொண்டுவந்த தீர்மானத்தின் அழுத்தம், அதனால் ஏற்பட்ட உலகளாவிய ரீதியிலான அழுத்தம் என்பனவே நவிப்பிள்ளை, இலங்கைக்கு வர மகிந்தர் சம்மதித்துள்ளார்.

ஆனால் நவிப்பிள்ளை அவர்கள் சிறிதும் மாறவில்லை. அவர் தனது நிலையில் திடமாகவே இருக்கிறார் என்பது அவரது செவ்வியின் மூலம் நிரூபனமாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்லும் நவிப்பிள்ளை அங்கே , தன்னிச்சையாகச் சென்று வட கிழக்கு மக்களைப் பார்வையிடவேண்டும் என வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: