சிலாங்கூரில் ஊராட்சி தேர்தல் மசோதா அடுத்த ஆண்டு கொண்டுவரப்படும்

1 excoசிலாங்கூர் அரசு ஊராட்சி தேர்தல் சட்ட முன்வடிவு ஒன்றை  வரைந்து வருகிறது. அடுத்த ஆண்டு அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் ஒன்றிரண்டு ஊராட்சி மன்றங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் மாநிலச் சட்டமன்றத்தில் இன்று கூறினார்.

படிப்படியாக மற்ற ஊராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஆர். ரஜிவின் (டிஏபி- புக்கிட் காசுங்) கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.