சுமத்ராவை நிலநடுக்கம் உலுக்கியது; பினாங்கில் அதிர்வுகள் உணரப்பட்டன

1 earthஇன்று பிற்பகல் மணி 3.32-க்கு ஒரு வலுவான நில நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்ராவை உலுக்கியது.

பினாங்கில் கொம்ட்ரா போன்ற உயர்ந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் அதன் அதிர்வுகளை உணர்ந்தார்கள்.

லொக்சியுமாவே-வுக்கு 65 கிலோ மீட்டர் தென்மேற்கே மையம் கொண்டிருந்த அந் நில நடுக்கம், ரைட்டர் அளவைக் கருவியில் 6.2 எனப் பதிவாகி இருந்தது.

சுனாமி அபாயம் பற்றிய அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. நில நடுக்கத்தால் அச்சே மாநிலத் தலைநகரான பண்டா அச்சே பாதிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

TAGS: