2013 இஸ்லாமிய சட்ட நிர்வாகம் (கூட்டரசு பிரதேசம்) ஒரு கொள்கை விவகாரம். அதன்மீது நீதித்துறை கருத்துரைப்பது விவேகமானதல்ல என்று நாட்டின் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
அரசாங்கம் கொண்டுவந்துள்ள சர்ச்சைக்குரிய சட்டமுன்வரைவு பற்றி அவரின் கருத்தைக் கேட்டபோது தலைமை நீதிபதி அரிபின் ஜக்கரியா அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.
“அது ஒரு கொள்கை சார்ந்த முடிவு என்பதால் என்னால் கருத்துரைக்க இயலாது. அது நீதிமன்றத்துக்கு வந்தால்தான் என்னால் பதிலளிக்க முடியும்”, என்றார்.
சர்ச்சைக்குரிய அம்மசோதா நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.