எதிர்வரும் கோலா பெசுட் இடைத்தேர்தலுக்கு சாத்தியமான வேட்பாளர்களாக பிஎன் மூவரை அடையாளம் கண்டுள்ளது.
“அவர்கள் உள்ளூர்வாசிகள், உயர்ந்த தகுதிகளைக் கொண்டுள்ளனர்,
விவேகமானவர்கள், உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்,” என பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மூன்று பெயர்களும் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அனுப்பப்படும். கூடிய விரைவில் நாங்கள் வேட்பாளரை முடிவு செய்வோம் என்றார் அவர்.
இதனிடையே இன்னும் ஒரிரு நாட்களில் பாஸ் கட்சி அந்த இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளரை அறிவிக்கும் என அதன் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் எனத் தெரிவித்துள்ளதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தத் தொகுதிக்கான பிஎன் பேராளர் டாக்டர் ஏ ரஹ்மான் ஜுன் 26ம் தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது.
வெள்ளிக் கிழமை கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன வாக்களிப்பு தினங்களை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.