பக்காத்தான் ராக்யாட் வசமுள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி வளர்ச்சி நிதி, பிஎன் தொகுதிகளுடன் ஒப்பிடுகையில் 70,000 ரிங்கிட்டுக்கும் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் இடையில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
அவ்வாறு டிஏபி சிரம்பான் எம்பி அந்தோனி லோக் கூறிக் கொண்டுள்ளார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து நேற்று கிடைத்த எழுத்துப்பூர்வமான பதிலை அவர் அதற்கு ஆதாரமாகக் காட்டினார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட தொகையை நஜிப் விவரமாகத்
தெரிவிக்கவில்லை என்றாலும் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை நாடு முழுவதும் பக்காத்தான் வசமுள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருப்பதாகவும் லோக் சொன்னார்.