தெரிவுக்குழுவினால் நாட்டை பிளவுப்படுத்தக் கூடிய அதிகாரங்களை நீக்க முடியும்: குணதாச அமரசேகர

eelam04713bதெரிவுக்குழு, அரசாங்க தரப்பு மாத்திரம் அங்கம் வகிக்கும் தன்னிச்சையான குழு என்பது தெளிவாக தெரிவதால், அதில் நாட்டை பிரிவினைக்கு உட்படுத்தக் கூடிய அதிகாரங்களை நீக்கும் முடிவுகளை எடுக்க முடியும் என தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு சவ்சிறிபாயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் இதனை கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தில், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், திருத்தங்களை ஏற்படுத்த முடியாது போனால், தேர்தலை ஒத்திவைக்குமாறு அவர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை வடபகுதியின் அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதால், எதிர்காலத்தில் வடக்கில் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை.

நாட்டை பிளவுப்படுத்தக் கூடிய விடயங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அச்சமின்றி வெளிப்படையாக அவர் வெளியிட்டுள்ள இந்த நிலைப்பாட்டை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ஆரம்பித்தில் இதனை கூறியிருந்தால், அமைச்சர்கள், தாம் விரும்பியவாறு பேச வாய்ப்பு ஏற்பட்டிருக்காது எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

TAGS: