Red Bean Army-யை இன்னும் அடையாளம் காணவில்லை:அமைச்சு ஒப்புதல்

deputyRed Bean Army (தட்டப் பயறு இராணுவம்) என்ற பெயரில் அழைக்கப்படும் மின்வெளி படையை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லை.

டிஏபி-இன் நிதியுதவியில் செயல்படுவதாகக் கூறப்படும் அது எங்குள்ளது, யார்யார் அதில் உள்ளனர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை என தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொகாரி (வலம்) கூறினார்.

“ஆனால், அதற்கு அந்தத் தரப்பினர் (மாற்றரசுக்கட்சி) நிதியுதவி செய்யும் தகவல் மட்டும் கிடைத்துள்ளது”, என மக்களவையில் அவர் கூறினார்.

அவ்விவகாரம்மீது தம் அமைச்சும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் (எம்சிஎம்சி) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.