13வது திருத்தம் தொடர்பாக மகிந்த அரசாங்கத்தின் ஏமாற்று ரீதியான கொள்கை காரணமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில், இந்தியா, இலங்கைக்கான தனது புதிய உயர்ஸ்தானிகரை நியமித்துள்ளது.
இலங்கைக்கு நியமிக்கப்படும் உயர்ஸ்தானிகர் அடுத்ததாக இந்திய வெளிவிவகார செயலாளர் அல்லது முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவது வழமையான நிகழ்வாகும். இலங்கைக்கான இந்தியாவின் முதல் தூதுவராக நியமிக்கப்பட்ட வீ. வெங்கடகிரி பின்னர், இந்தியாவின் ஜனாதிபதியாக தெரிவானார்.
உண்மையில் இலங்கையின் பல விடயங்கள் இந்தியாவின் விருப்பு, வெறுப்புக்கு அமையவே தீர்மானிக்கப்படுகிறது. அது நல்ல முறையிலோ அல்லது பலவந்தமாகவோ மேற்கொள்ளப்படுவதை கடந்த காலம் முதல் காணக் கூடியதாக இருக்கின்றது.
உதாரணமாக இலங்கையின் 30 வருட போருக்கு காரணமாக இருந்த இந்தியா, அதனை முடிவுக்கு கொண்டு வரவும் காரணமாக இருந்தது. 1987 – ஆம் 1990 ஆம் ஆண்டு வரை சுமார் ஒரு லட்சம் இந்திய படையினர் இலங்கையில் போரிட வந்திருந்தனர். இவர்களில் ஆயிரத்து 200 பேரை இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்தனர்.
அந்த காலததில் இலங்கையில் இருந்து இந்திய தூதுவர், இலங்கையின் உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது ஜனாதிபதியாக செயற்பட்டு வந்தார். போரை முடிவுக்கு கொண்டு வரை இந்தியா இலங்கைக்கு உதவியிருக்காது போனால், இலங்கையினால் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது.
உதாரணமாக இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்து கிபீர் தாக்குதல்களின் போதும் இந்திய வன்பரப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தியா தனது வான் பரப்பை பயன்படுத்தி அனுமதி வழங்காது போயிருந்தால், கிபீர் விமான தாக்குதல்களை நடத்தியிருக்க முடியாது.
இறுதிக்கட்ட போரில், முள்ளிவாய்க்கலில், சிக்கியிருந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலி போராளிகளை மீட்க வெளிநாட்டு இராணுவம் தலையிடவிருந்த சந்தர்ப்பத்தை தலையிட்டு, இந்தியாவே தடுத்தது மற்றுமொரு உதாரணமாகும்.
எனினும் தற்போது மகிந்த ராஜபக்ஷ நிர்வாகம் , இந்தியா நமக்கு தேவையில்லை, இந்தியாவினால் பயனிலை. எங்களுடன் சீனா இருக்கின்றது என பகிரங்கமாக கூறி, இந்தியாவிற்கு பாடம் படிப்பிற்கும் முட்டாள் தனமாக நாடகத்தை ஆடி, ஆட்சி அதிகார நாடகத்தின் முடிவை, இந்தியாவை கொண்டு எழுதி கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனடிப்படையில், புதிய இந்திய தூதுவராக தனது நியமனக்கடித்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்த வி.சி. சிங்ஹா, இவ்வாறான சந்தர்ப்பத்தில், முக்கிய பாத்திரத்தை வகிப்பார் என்பது நிச்சயம்.
புதிய இந்திய தூதுவரான ஸ்ரீ யஸ்வந் குமார் சிங்ஹா, பீகார் மாநிலத்தில் பிறந்தவர், அவரது தந்தை பிரபல இந்திய இராணுவ ஜெனரலான சிங்ஹா என்பது குறிப்பிடதக்கது. இவர் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படுதற்கு முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் பிரிவுக்கான செயலாளராக பணியாற்றியிருந்தார்.
சிங்ஹா இதற்கு முன்னர், வெனிசூலா, நியூயோர்க், துபாய், இஸ்லாமாபாத், ரோம், அபுதாபி, ரியாத் ஆகியவற்றின் இந்திய தூதுவராக சேவையாற்றி சிறந்த அனுபவங்களை கொண்டுள்ள ராஜதந்திரியாவார். அத்துடன் அவர் வரலாறு தொடர்பான பட்டதாரியுமாவார். இதனை தவிர இந்திய மொழிகளை அறிந்துள்ள அவர், ஐரோப்பிய மற்றும் அரபு மொழியிலும் தோர்ச்சி பெற்றவர்.
ராஜபக்ஷ நாடகக் குழு தனது இறுதி அங்கத்தில் அடித்து கொண்டிருக்கும், இந்த காலத்தில், இந்திய தூதுவரின் பணிகள் கடுமையானதாக இருக்கும் என்பதும் நிச்சயம்.