கோலா பெசுட் இடைத் தேர்தல் இயக்குநர் என்ற முறையில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அந்த சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நிறுத்தப்படும் பிஎன் வேட்பாளர் பெயரை ஜுலை 9ம் தேதி அறிவிப்பார்.
“பிஎன் தகுதியுள்ள வேட்பாளர் பெயர்களை தேர்வு செய்துள்ளது. வேட்பாளர் பெயரை துணைப் பிரதமர் ஜுலை 9ல் அறிவிப்பார்,” என திரங்கானு மந்திரி புசார் அகமட் சைட் கூறினார்.
அண்மையில் ஊடகங்களில் துன்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியான மூன்று பிள்ளைகளை சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
கோலா பெசுட் தொகுதிக்கான உறுப்பினர் டாக்டர் ஏ ரஹ்மான் மொக்தார் ஜுன் 26ம் தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது.
அங்கு ஜுலை 12ல் வேட்பாளர் நியமனமும் ஜுலை 24ல் வாக்களிப்பும் நிகழும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.