கோலா பெசுட் வேட்பாளரை பாஸ் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்

news07713cகோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பெயரை பாஸ் வரும்  செவ்வாய்க் கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நாளன்று பிஎன் -னும் தனது வேட்பாளரைக் குறிப்பிடும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செவ்வாய்க் கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்
வேட்பாளரை அறிவிப்பார் என பாஸ் இடைத் தேர்தல் இயக்குநர் சட்டிபுல் பாஹ்ரி மாமாட் கூறினார். என்றாலும் அந்தத் திட்டம் மாற்றத்துக்கு உரியது  என்றார் அவர்.

“அதற்கு நாங்கள் வேட்பாளர் பிரச்னையைத் தீர்க்க முடியும் என நம்புகிறோம்,”  என அவர் சினார் ஹரியான் நாளேட்டிடம் தெரிவித்தார்.

பெசுட் பாஸ் தொகுதித் தலைவர் வான் அஸ்ஹார் வான் அகமட் பெரும்பாலும்  நிறுத்தப்படலாம் எனக் கருதப்படுகின்றது.