புனர்வாழ்வு அளிப்பதற்காக அரசியல் கைதிகளை சட்ட மா அதிபர் தேர்ந்தெடுக்கும் போது பாரபட்சம் காட்டப்படுவதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் நமால் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
பணம், அரசியல் செல்வாக்கு போன்றவற்றுக்காகவும் மற்றும் அரசோடு இணைந்து செயல்பட இணக்கம் தெரிவிப்போருக்குக்கும் சலுகை காட்டப்படுவதாகவும் வழக்கறிஞர் நமால் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
விடுதலைப்புலி போராளிகள் மற்றும் அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் புனர்வாழ்வு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.
நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு தற்போது உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கைதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சுயாதீன அமைப்புக்கு கொடுக்க வேண்டும் என்று நமால் ராஜபக்ஷ தெரிவித்தார். -BBC