புத்த பகவான் ஞாநோதையம் பெற்றதாகக் கூறப்படும், மற்றும் உலகில் உள்ள அனைத்து புத்த மதத்தினரது சிறப்பு மிக்க விகாரையாக விளங்குவது மஹாபோதி விகாரையாகும்.
இது இந்தியாவில் போடிகாயா என்னும் இடத்தில் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு அங்கே தொடர்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது உலகில் உள்ள அனைத்து புத்த மதத்தினரையும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த விகாரைக்குள் வெடிக்காத நிலையில் மேலும் ஒரு குண்டு மீட்க்கப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது. இதேவேளை இம் மாதம் இந்த விகாரைக்கு, இலங்கையின் முன்னணி அமைச்சர் ஒருவர் விஜயம்செய்ய திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மகிந்தரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ள வேளையில் இது இடம்பெற்றுள்ளதால், இக் குண்டானது இலங்கை அரசியல் தலைவர்களை குறிவைத்து தான் நடத்தப்பட்டதாக என்ற சந்தேகம் இருப்பதாக இந்திய ஊடகங்கள் சில கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து இந்த விகாரைக்கு யாத்திரை செல்வோர் தமது பயணத்தை ஒத்திவைக்குமாறு, இலங்கை அரசு சிங்களவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.
இதேவேளை தாம் மிகவும் அதிர்சியில் இருப்பதாகவும், அங்கே என்ன நடந்தது என்பது குறித்த விபரங்களை உடனே அனுப்பிவைக்குமாறும், மகிந்தர் நியூ டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு கட்டளையிட்டுள்ளார் என்று த ஹிந்து பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இக் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று இதுவரை அறியப்படவில்லை. இதேவேளை எந்த ஒரு அமைப்பும் இதற்கு உரிமைகோரவும் இல்லை. உலகெங்கும் வாழும் பல மில்லியன் புத்த மதத்தவர்கள் இச் செய்திகேட்டு அதிர்ந்துபோயுள்ளார்கள்.