இந்தோனேசிய முகாம்களில் நிர்க்கதியாகும் இலங்கை அகதிகள்

eelam08713bஆஸ்திரேலியாவிற்கான கடல்வழிப் பயணத்தை நம்பி நிர்க்கதியான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் பலர் தொடர்ந்தும் இந்தோனேசியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த டி. தினேஸ் என்ற 26 வயது இளைஞன் இறுதியாக தாங்கள் 11 பேர் சுயவிருப்பத்துடன் நாடு திரும்பியதாக கூறுகின்றார்.

அந்நாட்டிலுள்ள 50 தொடக்கம் 60 முகாம்களில் பெண்கள், குழந்தைகள் அடங்கலாக இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தாலும் சரியான எண்ணிக்கை தெரியாது என்கின்றார் அவர்.

மலேசியாவில் 15 மாதங்கள் தொழில் செய்து கொண்டிருந்தவேளை நிறைய சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் தான் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல தீர்மானித்ததாக கூறும் அவா், இந்தோனேசியாவிலிருந்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி படகில் ஏறும்போது தன்னுடன் 89 பேர் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

கைதானவர்களில் 31 பேர் இலங்கையர்கள், ஏனையோர் பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் நாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். -BBC

TAGS: