செய்திகளை நியாயமாக வெளியிடும் நாளேடுகள்………

1changசெய்திகளை நியாயமாகவும் நடுநிலையாகவும் வெளியிடும் நாளேடுகள் எவை?  சீனமொழி நாளேடுகள்தான் என்கிறார் யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா விரிவுரையாளர் சாங் பெங் கீ.

‘தேர்தலில் பன்முக கலாச்சார மதிப்புகள்’ என்னும் கருத்தரங்கில் சாங் இவ்வாறு கூறினார்.

அவர், சின் சியு டெய்லி, நன்யாங் சியாங் பாவ், பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, ஸ்டார், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் நேசன், மலேசிய நண்பன் ஆகியவற்றில் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளான ஏப்ரல் 20-க்கும் வாக்களிப்பு நாளான மே 5-க்குமிடையில் வெளிவந்த 7,481 செய்திகளை ஆய்வுசெய்து இம்முடிவுக்கு வந்திருக்கிறார்.