2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத் திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டது.
அத்தகைய மசோதா அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தாங்கள் அனுமதித்தது ஏன் என முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் விளக்க வேண்டும் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இப்போது கோரியுள்ளார்.
மக்களவையில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அந்த மசோதா அமைச்சரவையில் முழுமையாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
அந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னர் அதன் 107(b) பிரிவில் உள்ள ‘mother or father’ and ‘parent’ (தாய் அல்லது தந்தை, பெற்றோர்) ஆகிய வார்த்தைகளில் உள்ள வேறுபாட்டை முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் எப்படிப் புரிந்து கொள்ளாமல் போனார்கள் என டாக்டர் சுவா வினவினார்.
“முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள், குழந்தைகள் மதம் மாற்றம் சம்பந்தப்பட்ட உணர்வுகளைத் தூண்டக் கூடிய அந்த மசோதா அமைச்சரவையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தாங்கள் எப்படி அனுமதித்தனர் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்,” என்றார் அவர்.
கேட்டாலும் கேட்டார் ஒரு கேள்வி நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப்போகிற மாதிரி! ஆளுங்கட்சி எதைக்கொண்டுவந்தாலும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் முட்டாள் தலைவர்களை முதலில் களைஎடுக்கவேண்டும்.
இரண்டு இந்திய அமைச்சர்கள் இதற்கு ஒன்றும் பதில் தர மாட்டார்கள்.வெண்ணை வெட்டிகள்.இவங்கள் எல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள்.
சொய் லெக் பேசாமல் அவருடைய வேலைகளை கவனிக்கவும்
mic/ppp/ipf சாம்ப்ரானிகள் .
குருட்டு கோமாளிகள்
பாரிசானுக்கு வாலாட்டிகள்
சமுதாய சொத்தைகள் …!