இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனின் குடிவரவு நீதிமன்றமொன்று இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும்.
இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படுவோர் துன்புறுத்தல்களுக்கு இலக்காகக் கூடிய அபாயங்களை எதிர்நோக்குகின்றனர்.
புலம்பெயர் தமிழர்களது குடும்ப உறுப்பினர்கள், புலி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என பிரிட்டன் குடிவரவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.