தமது சகாவான சுற்றுப்பயண அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸுடன் மோத விரும்பவில்லை எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.
1948ம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வது என அமைச்சரவை முடிவு செய்ததா என்பது மீது அவருக்கும் நஸ்ரிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அது ரத்துச் செய்யப்பட்டலும் அல்லது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டாலும் தேச நிந்தனைச் சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர்க்கப்படுவதே முக்கியம் என்றார் அவர்.
“நாங்கள் மோதிக் கொள்ள விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். கொள்கை அளவில் நாம் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளோம். பிரச்னைகளை ஒற்றுமைச் சட்டம் வழி தீர்க்க முடியும் என்றால் தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்யலாம்,” என்றார் சுப்ரமணியம்.
அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
உங்களை மோதிக்கொள்ள சொல்லவில்லலை ! உன்மையை மூடி மறைக்கவேண்டாம் என்றுதான் சொல்கிறோம். கூஜா தூக்கும் கலாசாரத்தை ம இ கா கைவிடவேண்டும் . சரவணன் போன்று துணிவுடன் பேசவேண்டும் , பதவிக்காக சோரம் போகவேண்டாம். வாய்திறக்க பயம் இருந்தால், மரியாதையாக மாமியார் வீட்டுக்கு போய் ஓய்வு எடுங்கள்.
இவனும் bn கையை முத்தமிடுவான்!!!!!!!!
கைய
மட்டுமா
முத்தமிடுவான்?
சவாலே சமாளி என்ற மனம் எங்கே ?
உங்கள் வேலை சோத்துக்கா….? சேவைக்கா….?