திரெங்கானுவில் நிலைத்தன்மை சீர்குலையாதிருக்க வாக்காளர்கள் பிஎன்னை ஆதரிக்க வேண்டும் என்கிறார் அக்கூட்டணியின் துணைத் தலைவர் முகைதின் யாசின்.
இல்லையேல் அங்கு பல குழப்பங்கள் நேரும். மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமும் ஏற்படலாம் .
“அப்படியெல்லாம் நிகழாதிருக்க எளிய வழி, பிஎன்னை ஆதரிப்பதுதான். அப்படிச் செய்தால் இப்போதுள்ள நிலை தொடரும், நிலைத்தன்மை இருக்கும், மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்வதற்கும் அது உதவும்”, எனத் துணைப் பிரதமருமான முகைதின் கூறினார்.
திரங்கானுவில் அடித்துக் கொண்டு சாவும் அம்னோ புத்ராக்களை அடித்து விரட்ட, பாஸ் கட்சியை ஆதரியுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இது எப்படி இருக்கு, துணை பிரதமர் அவர்களே?