ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து 88 பேரை ஆஸ்திரேலிய மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். காணாமல்போயுள்ள 8 பேரை தேடிவருகின்றனர். ஆண் குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவிலிருந்து இந்தப் படகு புறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், இரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே படகில் இருந்துள்ளதாகத் தெரியவருகிறது.
கிறிஸ்மஸ்தீவிலுள்ள ஆஸ்திரேலியாவின் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான முகாமை நோக்கி இந்தப் படகு சென்றுள்ளது.
இந்தோனேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத படகுப் பயணங்கள் நடந்துவருகின்றன.
ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் கோரி வந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாகவும் மாறிவிட்டது.
இதனால், இனிமேல் சட்டவிரோத பயணங்கள் ஊடாக தமது நாட்டுக்குள் வரும் படகுகள் திருப்பியனுப்பப்படும் என்று ஆஸ்திரேலிய அரசும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-BBC