1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தினால் ‘பழைய கள்ளை புதிய மொந்தையில்’ (it should still put old wine in a new bottle) என்பது போல அதனைக் கொடுக்க வேண்டும் என முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர் கூறுகிறார்.
“அந்தச் சட்டம் ரத்துச் செய்யப்படுமானால் பாதுகாப்பு விஷயங்களையும் இன ஒற்றுமையையும் உள்ளடக்கிய (புதிய) சட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும்.”
பெரித்தா ஹரியானில் இன்று வெளியான பேட்டியில் ரஹிம் நூர் அவ்வாறு கூறியுள்ளார்.
தாம் அந்தச் சட்டம் நிலை நிறுத்தப்படுவதை விரும்புவதாக குறிப்பிட்ட அவர், தேவையானால் அதற்கு சில திருத்தங்களைச் செய்யலாம் என்றும் சொன்னார்.
“அதனை ரத்துச் செய்வதற்கு என்ன காரணம் ? சில திருத்தங்கள் வேண்டுமானால் தேவைப்படலாம்,” எனவும் அவர் சொன்னார்.
குறுகிய கால நன்மைகளுக்காக அரசாங்கம் நீண்ட கால நலன்களைத் தியாகம் செய்யக் கூடாது என்றும் ரஹிம் நூர் எச்சரித்தார்.
இவன செ..பால அடிக்கோணும் ,,
MR கை குந்தா ! இந்த முன்னாள் போலிஸ் அதிகாரி ‘கண்ணை’ பார்த்து குத்து விடுவார் கவனம் ! அனுவார் ஒரு தடவை வாங்கி இருக்கிறார் !