எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்தைத் தோற்கடிக்க ஒத்துழைப்புத் தருமாறு மனோ கணேசன் மற்றும் அசாத் சாலியிடம் கெஞ்சாத குறையாக ரணில் விக்கிரமசிங்க மன்றாடியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி ஆகியோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தேர்தலில் அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கு தம்முடன் ஒத்துழைக்குமாறு மனோ கணேசன் மற்றும் அசாத் சாலியிடம் மன்றாட்டமாக கெஞ்சிக் கேட்டுள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் தாம் விரும்பிய மாவட்டத்தில் போட்டியிட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் போதுமான வாக்குகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோள் தொடர்பில் இருவரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளதாகவும், இதன் பிரகாரம் அசாத் சாலி கண்டியிலும், மனோ கணேசன் நுவரெலியாவிலும் போட்டியிடுவார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.