தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும்போது தகவல் தெரிவிக்கப்படும்

ecதேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் தேர்தல் ஆணைய(இசி) த்தின் நடவடிக்கை தொடக்கக் கட்டத்தில்தான் உள்ளது. அதில் உத்தேசிக்கப்படும் மாற்றங்கள் குறித்து தகவல் அளிக்கப்படும் என்று உறுதி கூறினார் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம்.

நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதிகளைப் புதிதாக சேர்ப்பது பற்றி இசி இதுவரை  எந்த முடிவும் செய்யவில்லை என்று டிஏபி-இன் கோத்தா மலாக்கா எம்பி சிம் தொங் ஹிம்முக்கு எழுத்து வடிவில் அளித்த மறுமொழியில் அவர் கூறினார்.

“(மாற்றங்கள் செய்யப்படும்போது) இசி முதலில் மக்களவைத் தலைவருக்கும் பிரதமருக்கும் தெரிவிக்கும். அது ஏதாவது ஒரு செய்தித்தாளிலும் வெளியிடப்படும்”.

அதன்பின்னர் வாக்காளர்களின் பின்னூட்டத்துக்காக ஒரு மாதம்வரை காத்திருக்கும் என்று ஷஹிடான் குறிப்பிட்டார்.