என் 20 வருட கனவை தவிடுபொடி ஆக்கிவிட்டார்கள்: டக்ளஸ் புலம்பல் !

douglas devanandhaவடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சராக ஆழும் மகிந்தரின் கட்சி சார்பாகப் போட்டியிட இருப்பவர் தயா மாஸ்டர் ஆவார். இத்தேர்தலில் தம்மையே முதலமைச்சர் வேட்ப்பாளராக மகிந்தர் நிறுத்துவார் என்று நம்பியிருந்திருக்கிறார் டக்ளஸ்.

ஆனால் அதில் மண் விழுந்தது யாவரும் அறிந்ததே. இன் நிலையில், தான் வடக்கின் முதலமைச்சராக வரவேண்டும் என்று 20 வருடங்களாகக் கனவு கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தன்னை 13 முறை கொலைசெய்ய முயற்சித்தார்கள். ஆனால் நான் தப்பிவிட்டேன். அந்த இயக்கத்தில் இருந்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துள்ள தயா மாஸ்டர் என்னை வெல்வதா ? அது ஒருபோதும் நடக்கப்போவது இல்லை.

இவர்களை மக்கள் நன்றாக அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் தனது 20 வருடக் கனவில் மண் வீழ்ந்துவிட்டதை டக்ளஸ் நன்றாக உணர்கிறார் போலவுள்ளது. அதனை விட தயா மாஸ்டர் தேர்தலில் வென்றுவிடக்கூடாது என்பதில் அவர் அதிக அக்கறை செலுத்திவருகிறார்.

ஈ.பி.டி.பி என்பது ஒரு ஆயுதக்குழு. அது ஆரம்ப காலத்தில் தனி ஈழம் வேண்டும் என்று ஆயுதங்களை கையில் தூக்கினார்கள். ஆனால் நாளடைவில் அரசுடன் இணைந்து எட்டப்பர் வேலை பார்த்தார்கள்.

ஆக மொத்தத்தில் அதன் தலைவர் , தான் பதவிக்காக 20 வருடம் அலைந்தேன் என்று தன் வாயால் கூறியுள்ளார். அப்படி என்றால் ஏன் போராடவேண்டும் என்று அப்போது கிளம்பினார்கள் ? கொள்கைகளை மாற்றி, பாதையையும் மாற்றி , இவர்கள் பயணங்களும் மாறிவிட்டது.

TAGS: