சிங்களவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எரிச்சலூட்டும் செயற்பாடுகளையே செய்து வருகின்றனர்: யாழ்.ஆயர் எடுத்துரைப்பு

eelam18713aஇலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சிறுபான்மை மக்களை எரிச்சலூட்டும் செயற்பாடுகளையே தொடர்ந்தும் செய்து வருகின்றன என யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, ஐரோப்பிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரும் ஆஸ்திரிய நாட்டின் தூதுவருமான ரைமுன் மாஜித்திடம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அவர் யாழ்.ஆயரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது போருக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் காணப்படும் அரசியல் உறவுகள், இரண்டு பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கு இடையில் காணப்படும் தொடர்புகள், அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினார்கள்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த யாழ்.ஆயர்,

வடக்கு மாகாண சபையானது உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழியாக தமிழர்களுக்கு அமைந்துள்ள அதேவேளை, உலகத்திற்கு தமது விருப்பங்களை அறிவுறுத்துவதற்கு முக்கியமான வழியாகவும் உள்ளது.

மாகாண சபையானது அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது. இலங்கையில் பெரும்பான்மையினர் இன்னமும் சந்தேகக் கண்ணோடு தான் சிறுபான்மை மக்களை பார்க்கின்றனர். ஆனால் அரசாங்கம் விரும்பினால் இதில் மாற்றம் செய்யலாம்.

சில அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இன்னமும் செய்ய வேண்டியுள்ளது. இவற்றை விட மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்கு அரசு முன்வர வேண்டும். மக்கள் அபிவிருத்தியை அல்ல. அரசியல் தீர்வையே விரும்புகின்றனர் என்றார்.

TAGS: